சோகம்.. எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 இளைஞர்கள் உடல் சிதறி பலி..!

சோகம்.. எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 இளைஞர்கள் உடல் சிதறி பலி..!

Update: 2022-06-07 05:00 GMT

கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் கூட்லிகி தாலுகாவில் உள்ள கிராமத்தில் போரய்யா என்பவருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று உள்ளது.

நேற்று மதியம், போரய்யா தனது ஹோட்டலில் உணவு சமைத்து கொண்டு இருந்தார். அப்போது, திடீரென பிடித்த தீ ஹோட்டல் முழுவதும் பரவி எரிந்தது.

உடனே, போரய்யா உட்பட 3 பேர் தண்ணீரை ஊற்றி தீயை அணைக்க முயன்றனர். அப்போது, ஹோட்டலில் இருந்த எரிவாயு சிலிண்டர் திடீரென்று வெடித்துச் சிதறியது. இதில், 2 இளைஞர்கள் உடல் சிதறி பலியாகினர். போரய்யா காயமடைந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் குடகோட்டே போலீசார் விரைந்து வந்து 2 இளைஞர்களின் உடல்களை மீட்டனர். மேலும், தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து ஹோட்டலில் பிடித்த தீயை அணைத்தனர்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பலியான இளைஞர்கள் குடகோட்டே பகுதியை சேர்ந்த சிவப்பா (28), ஸ்ரீகாந்த் (23) என்று தெரிந்தது.

Similar News