சோகம்.. தேர்வு முடிவு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட பிளஸ் 2 மாணவி தேர்ச்சி..!
சோகம்.. தேர்வு முடிவு பயத்தால் தற்கொலை செய்துகொண்ட பிளஸ் 2 மாணவி தேர்ச்சி..!
திருப்பத்தூர் அருகே, 12-ம் வகுப்பு மாணவி, தேர்வு முடிவு பயத்தால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த நாயக்கனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கொல்லக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த அறிவழகன் என்பவரின் மகள் ஷீபாஸ்ரீ (17). இவர் 12-ம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தார்.
இந்நிலையில், :நான், தேர்வு சரியாக எழுதாத காரணத்தினால் மதிப்பெண்கள் மிகவும் குறைவாக வரும்; தேர்வில் நான் தேர்ச்சி பெறுவது சந்தேகம்” என்று, பெற்றோரிடம் தொடர்ச்சியாக கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று மாலை முதல் ஷீபாஸ்ரீயை காணவில்லை என்று தேடி வந்த நிலையில், இன்று காலை வீட்டின் அருகில் உள்ள விவசாய கிணற்றில் மாணவி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்று தேர்வு முடிவு வெளியான நிலையில், மாணவி ஷீபாஸ்ரீ 344 மதிப்பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.