சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்.. அணையில் மூழ்கி 4 மாணவர்கள் பலி..!
சுற்றுலா சென்ற இடத்தில் சோகம்.. அணையில் மூழ்கி 4 மாணவர்கள் பலி..!
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள சயாத்திரி உண்டு உறைவிடப் பள்ளியில் படித்து வரும் மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் கல்வி சுற்றுலா அழைத்துச் சென்றனர்.
அவர்கள், கேத் தாலுகாவில் உள்ள சசக்மன் அணையை பார்வையிட்டனர். பின்னர் அணைக்கட்டு பகுதியில் மாணவ, மாணவிகள் குளித்தனர். அப்போது, அவர்களில் சிலர் ஆழமான பகுதிக்குச் சென்று தண்ணீரில் மூழ்கினர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மாணவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்களால் ஒரு சிலரை மட்டுமே மீட்க முடிந்தது. ஆனால் 2 மாணவர்களும், 2 மாணவிகளும் அணையில் மூழ்கினர்.
தகவல் அறிந்த மீட்பு படையினர் விரைந்து சென்றனர். அவர்கள் மாணவர்களை தேடினர். அப்போது 4 பேரையும் அவர்களால் பிணமாக தான் மீட்க முடிந்தது. இந்த மாணவர்கள் அனைவரும் சுமார் 15 வயதுடையவர்கள். 10-ம் வகுப்பு படித்து வந்தது தெரியவந்தது.
கல்விச் சுற்றுலா சென்ற இடத்தில் மாணவர்களை பறி கொடுத்த ஆசிரியர்கள், சக மாணவர்களும் சோகத்தில் மூழ்கினர். தகவல் அறிந்த பெற்றோர் பதறியடித்து சென்று தங்களது பிள்ளைகளின் உடல்களை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது.