மனைவிக்கு தெரிந்ததால் விபரீதம்.. ரூம்போட்டு சோகமுடிவு எடுத்த உறவினர்கள் !!

மனைவிக்கு தெரிந்ததால் விபரீதம்.. ரூம்போட்டு சோகமுடிவு எடுத்த உறவினர்கள் !!

Update: 2022-07-02 18:46 GMT

ஈரோடு மாவட்டம் திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம், மாநகராட்சி தூய்மை பணியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் சண்முகத்திற்கும் தமிழ்ச்செல்வியின் உறவினரான காந்திமதிக்கும் இடையே தகாத உறவு இருந்து வந்துள்ளது. இந்த விவகாரம் தமிழ்செல்விக்கு தெரிய வந்ததால் கணவர் சண்முகத்தை கண்டித்துள்ளார். மேலும் மனைவிக்கு தெரிந்துவிட்டதால் சண்முகம், காந்திமதி இருவரும் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

அதனால் என்ன செய்வதென்று அறியாது அவர்கள் இருவரும் ஈரோடு அருகே சத்தி சாலையில் உள்ள தனியார் தங்கும் விடுதிக்கு சென்றுள்ளனர். அங்கு கணவன், மனைவி என கூறி மருத்துவமனைகளுக்கு செல்வதற்காக அறை எடுப்பதாக தெரிவித்து விடுதியில் தங்கியுள்ளனர்.

இன்று காலை அவர்கள் தங்கியிருந்த அறையின் கதவு வெகு நேரமாகியும் திறக்கப்படவில்லை. அதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் அதனை திறக்க முயற்சித்துள்ளனர். இருப்பினும் கதவை திறக்க முடியாததால் வீரப்பன்சத்திரம் காவல் துறையினருக்கு அவர்கள் தரகவல் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு இருவரும் மதுபானத்தில் எலி மருந்தை கலந்து உட்கொண்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் இருவரது உடலையும் கைப்பற்றி அருகே உள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ஆனந்த் குமார் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்து இந்த தற்கொலை குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Similar News