கோவையில் சோகம்.. தாய் மற்றும் 2 மகள்களின் உயிரை பறித்தது யுபிஎஸ்..!

கோவையில் சோகம்.. தாய் மற்றும் 2 மகள்களின் உயிரை பறித்தது யுபிஎஸ்..!

Update: 2022-03-15 13:55 GMT

கோவை மாவட்டம் உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், இன்று காலை 7 மணியளவில் விஜயலட்சுமி வீட்டில் இருந்து புகை வந்துள்ளது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில், கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு துறையினர் வந்து கதவை உடைத்து தீயை அனைத்தனர். இதைத்தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது, 3 பேரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியாகி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவலறிந்த பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி ராஜபாண்டியன், துடியலூர் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ‘வீட்டில் இருந்த யுபிஎஸ் கருவியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக புகை ஏற்பட்டுள்ளது. இதை அஞ்சலி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் சேர்ந்து அணைக்க முயற்சித்துள்ளனர். ஆனால், அதற்குள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அஞ்சலியும், விஜயலட்சுமியும் இறந்தனர்.

இதேபோல் படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்த அர்ச்சனாவும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும், அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகியுள்ளது’ என்றனர்.

Similar News