ஓசூரில் நடந்த சோகம்..!! இறப்பிலும இணைபிரியாத தம்பதி!!

ஓசூரில் நடந்த சோகம்..!! இறப்பிலும இணைபிரியாத தம்பதி!!

Update: 2022-05-29 05:05 GMT

ஓய்வுபெற்ற ஆசிரியரான கிருஷ்ணகிரி மாவட்டடை சேர்ந்தவர் மாணிக்கம் (70).இவருக்கு கோமதி (63) என்கிற மனைவி உள்ளார். இந்த நிலையில், நேற்று அதிகாலை மாணிக்கத்துக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.

இதையடுத்து அவரது குடும்பத்தினர், மாணிக்கத்தின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்ய ஏற்பாடு செய்து வந்தனர். இதனிடையே, கணவர் மாணிக்கம் மீது அதிக அன்பு வைத்திருந்த கோமதி, அவரது பிரிவால் மனமுடைந்து காணப்படார். அப்போது, காலை 8 மணியளவில் கோமதி திடீரென மயங்கி உள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அவரிடம் சென்று பார்த்தபோது அவரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

கணவர் இறந்த சில மணி நேரங்களில் அதிர்ச்சியில் மனைவி உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து, இருவரது உடலுக்கும் ஒன்றாக இறுதிச் சடங்குகள் நடைபெற்றது.

தம்பதியினர் இறப்பிலும் இணைபிரியாமல் ஒன்றிணைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Similar News