குடந்தையில் சோகம்.. 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை பலி..!
குடந்தையில் சோகம்.. 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை பலி..!
கும்பகோணத்தில், அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பெசன்ட் ரோட்டில் வசிப்பவர் ராஜு. இவர், தனது 4 வயது குழந்தை கோபிகாவை, பச்சையப்பன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பின் 4-வது மாடியில் வசிக்கும் தனது சகோதரி வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு, வீட்டின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி கோபிகா கம்பியின் மீது ஏறியபோது கால் தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயம் அடைந்த சிறுமியை உறவினர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டில் சிறுமியின் அத்தை மட்டுமே இருந்த நிலையில், அவர் பால்கனி கதவை மூடி விட்டு குளிக்க சென்றதாகவும், அப்போது கதவை திறந்து சிறுமி விளையாட சென்றபோது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்தது.
அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்து பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.