திருப்பூரில் சோகம்..!! உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் தற்கொலை..!!
திருப்பூரில் சோகம்..!! உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் தற்கொலை..!!
திருப்பூர் இரண்டாவது ரயில்வே கேட் அருகே 17 வயது மிதிக்கதக்க சிறுவன் ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருப்பூரில் சோகம்..!! உருக்கமாக கடிதம் எழுதிவிட்டு ரயில் முன் பாய்ந்து பள்ளி மாணவன் தற்கொலை..!! அதனைத் தொடர்ந்து, ரயிலில் அடிப்பட்டு இந்த சிறுவன் குறித்து விசாரணையை ரயில்வே போலீசார் நடத்தி வந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் பலவஞ்சிப்பாளையம் மூகாம்பிகை நகர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் விமல்ராஜ் என்பதும், இவர் 11-ம் வகுப்பு மாணவர் என்பதும் தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், விமல்ராஜூக்கு திக்குவாய் இருந்துள்ளதால், தனது நண்பர்களுடன் சகஜமாக பேச முடியவில்லை என்று பெற்றோரிடம் அவ்வபோது கூறி வந்துள்ளார். இதனிடையே போலீசார் மாணவனின் வீட்டில் இருந்து ஒரு கடிதம் எடுத்துள்ளனர்.
அந்த கடிதத்தில் எனக்கு திக்கு வாய் உள்ளாதால் நண்பர்கள் யாருடனும் என்னால் சகஜமாக பேசமுடியவில்லை, மேலும் எனது அப்பா அம்மாவுக்கும் எந்த வேலையும் செய்து கொடுக்க முடியவில்லை. எனக்கு வாழப் பிடிக்கவில்லை. அதனால் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொள்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் கிடையாது, இது நானே எடுத்த முடிவு, ஐ லவ்யூ அப்பா, அம்மா, தங்கை, பாட்டி, நண்பர்கள் என உருக்கமாக எழுதியிருந்தது.