வெள்ளியங்கிரியில் சோகம்.. மலையேறிய வழக்கறிஞர் மயங்கி விழுந்து மரணம்..!

வெள்ளியங்கிரியில் சோகம்.. மலையேறிய வழக்கறிஞர் மயங்கி விழுந்து மரணம்..!

Update: 2022-05-27 04:55 GMT

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் இளஞ்செழியன் (55). இவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தனது நண்பர் ராமமூர்த்தி என்பவருடன் சென்னையில் இருந்து கோவை வந்த இவர், செவ்வாய்க்கிழமை இரவு கோவை பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க இரவு மலை ஏறி, 7வது மலையில் உள்ள சுயம்புலிங்க ஆண்டவரை தரிசனம் செய்து விட்டு, மீண்டும் காலை 9 மணிக்கு கீழே இறங்கத் தொடங்கியுள்ளார்.

6-வது மலையில் வந்தபோது, தனக்கு உடல்நிலை சரியில்லை என தனது நண்பரிடம் கூறிய இளஞ்செழியன் மெதுவாக மலை இறங்கி வந்துள்ளார். பின்னர், மாலை 5-வது மலை அருகே வந்தபோது அவர் மயங்கி விழுந்துள்ளார். அங்கு மலையேற்றத்திற்கு வந்த மருத்துவர் ஒருவர் அவரை சோதனை செய்தபோது, அவர்  உயிரிழந்தது தெரிந்தது.


இது குறித்து அங்கிருந்த பக்தர்கள் ஆலாந்துறை போலீஸ் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, இளஞ்செழியன் உடல் அடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வழக்கறிஞர் உயிரிழப்பு தொடர்பாக  தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News