கணவன் கண்முன்னே சோகம்.. லாரி மோதி பெண் போலீஸ், 2 வயது குழந்தை பலி..!
கணவன் கண்முன்னே சோகம்.. லாரி மோதி பெண் போலீஸ், 2 வயது குழந்தை பலி..!
காஞ்சிபுரம் மாவட்டம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் பனப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த உமாதேவி (26).
இவர், நேற்று இரவு பணியை முடித்துவிட்டு தனது வீட்டிற்கு கணவர் ராஜா மற்றும் இரண்டு வயது மகனுடன் சென்று கொண்டிருந்தார்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பாலுசெட்டி சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று இரண்டு கார்களை மோதி முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், கணவர் ராஜா கண்முன்னே மனைவி உமாதேவி மற்றும் மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலுசெட்டி காவல்துறையினர், காயமடைந்த ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த பாலுசெட்டி காவல்துறையினர், தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். சாலை விபத்தில் பெண் காவலரும் அவரது பிஞ்சு குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.