போலீஸ் அணிவகுப்பில் சோகம்.. மயங்கி விழுந்த கான்ஸ்டபிள் மரணம்..!
போலீஸ் அணிவகுப்பில் சோகம்.. மயங்கி விழுந்த கான்ஸ்டபிள் மரணம்..!
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் அதி விரைவு போலீஸ் படை பிரிவில், தானே சகரத்தில் கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தவர் மகேஷ் மோர் (27).
இந்நிலையில், அதிவிரைவு படைப்பிரிவில் உள்ள போலீசார் அனைவரும் இன்று காலை வழக்கமான அணிவகுப்பு (பரேட்) நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதில், கான்ஸ்டபிள் மகேஷூம் பங்கேற்றார்.
அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென மகேஷ் மோர் மயங்கி கீழே விழுந்தார். இதைப் பார்த்த சக காவலர்கள் அவரை தானே சிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மகேஷை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால், சக போலீசார் அதிர்ச்சியடைந்தனர். மகேஷின் உடல் பிரதே பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அணிவகுப்பின் போது மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்கு பின்னர்தான் மகேஷ் உயிரிழப்புக்கான காரணம் குறித்து தெரியவரும். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.