தொடரும் சோகம்!! ஜம்மு-காஷ்மீரில் வங்கி மேலாளர் சுட்டுக்கொலை..!!
தொடரும் சோகம்!! ஜம்மு-காஷ்மீரில் வங்கி மேலாளர் சுட்டுக்கொலை..!!
குல்காம் மாவட்டத்தில் உள்ள அரேஹ் மோகன்போராவில் உள்ள எல்லாக்கி தேஹாட்டி வங்கியில் உள்ள வங்கி மேலாளர் விஜய்குமார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் அவர் பலத்த காயமடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் ராஜஸ்தான் மாநிலம் ஹனுமங்கரில் வசிப்பவர் என்று போலீசார் தெரிவித்தனர்.
கடந்த செவ்வாயன்று, ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 36 வயதான காஷ்மீரி பண்டிட் மற்றும் உயர்நிலைப் பள்ளி ஆசிரியரான ரஜ்னி பாலா பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். கடந்த இரண்டு மாதங்களில், காஷ்மீரில் காஷ்மீர் பண்டிட் ஊழியர் ராகுல் பட் உட்பட இரண்டு பொதுமக்களும், மூன்று போலீசாரும் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில், பண்டிட் சமூக மக்களை பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கப்பட்டு வரும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் இன்று (ஜூன் 3) உயர்மட்டக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் தலைமை இயக்குனர் குல்தீப் சிங் மற்றும் எல்லை பாதுகாப்பு படை தலைவர் பங்கஜ் சிங் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.