ரசகுல்லா ஸ்வீட்டால் பாதிக்கப்பட்ட ரயில் சேவை!!
ரசகுல்லா ஸ்வீட்டால் பாதிக்கப்பட்ட ரயில் சேவை!!
ரசகுல்லா விற்பனையாளர்களால் பல ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
இந்தியாவின் பெரும்பாலான மக்களின் விருப்பமான ஸ்வீட்டாக குளோப் ஜாமூன், ரசகுல்லா போன்ற உணவுகள் உள்ளன. அப்படிப்பட்ட ரசகுல்லாவால் தான் இந்த பிரச்னை. ரசகுல்லா பீகாரில் ரயில் சேவையையே பாதித்திருக்கிறது.
பீகாரில் லக்கிசாராய் என்ற பகுதி ரசகுல்லாவுக்கு பெயர் பெற்றது. லக்கிசாராய் அருகே, பாரகியா (Barahiya) ரயில் நிலையம் உள்ளது. ஆனால் அங்கு பெரும்பாலான ரயில்கள் நின்று செல்வதில்லை.
இதனால் தங்களது ரசகுல்லா விற்பனை பாதிக்கப்படுவதாகக்கூறி, ரசகுல்லா உற்பத்தி செய்யும் 200 கடைகளைச் சேர்ந்தவர்கள் பாரகியா ரயில் நிலைய தண்டவாளத்தில் தற்காலிக நிழற்குடை அமைத்து போராட்டம் நடத்தினர்.
இதன் காரணமாக டெல்லி - ஹவுரா இடையேயான பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. இதனையடுத்து போராட்டக்காரர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பாரகியா ரயில் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்த நிலையில், போராட்டம் கைவிடப்பட்டது.
newstm.in