ரயில் பயணத்தில் இனி அந்த பிரச்சினை இருக்காது.. சூப்பர் அறிவிப்பு !!

ரயில் பயணத்தில் இனி அந்த பிரச்சினை இருக்காது.. சூப்பர் அறிவிப்பு !!

Update: 2022-06-22 20:10 GMT

நீண்ட தூரம் பயணிக்க நினைப்பவர்கள் பெரும்பாலும் ரயில் பயணங்களையே தேர்ந்தெடுக்கின்றனர். பேருந்து மற்றும் விமானங்களை விட ரயில்களில் கட்டணம் மிகவும் குறைவு, குடும்பத்துடன் சௌகரியமாக பயணம் செய்ய முடிவதாலும் ரயில் பயணங்களை அதிகப் பேர் விரும்புகின்றனர்.
 
ரயில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது எந்த பெர்த் உங்களுக்கு வேண்டும் என்று தேர்வு செய்யும் வசதி உள்ளது. ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் புக்கிங் செய்யும்போதெல்லாம் விரும்பிய சீட் உங்களுக்கு கிடைப்பது இல்லை. எனினும் பயணிகளின் வசதிக்காக ரயில் பெட்டிகளில் உள்ள பெர்த் (படுக்கை) தொடர்பாக சில விதிமுறைகளை இந்திய ரயில்வே வகுத்துள்ளது.  


 
ரயில் பயணத்தின் போது மிடில் பெர்த் கிடைத்தால் சிலர் வசதியாக இருக்காது என எண்ணுவர். கீழ் பெர்த் கிடைத்த பயணிகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் நீண்ட நேரம் அமர்ந்துகொண்டே இருப்பார்கள்; தூங்கவே மாட்டார்கள். அவர்கள் தூங்கினால்தான் மிடில் பெர்த்தை ஓப்பன் செய்து அதில் படுக்க முடியும். அதுபற்றி கேட்டாலும் பயணிகளுக்கிடையே சில நேரங்களில் வாக்குவாதமும் சண்டையும் ஏற்படும். இதுபோன்ற சூழலில் மிடில் பெர்த் கிடைத்த பயணிகள் ரயில்வேயின் விதிமுறை பற்றி தெரிந்திருந்தால் நல்லது.
 
ரயில்வே விதிகளின்படி, மிடில் பெர்த்தில் இருக்கும் பயணிகள் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே அந்த பெர்த்தில் தூங்க முடியும். அதைத் தாண்டி தூங்கினால் சகபயணிகள் அதனை தடுக்கலாம்.


 
அதேபோல, காலை 6 மணிக்குப் பிறகு, மற்ற பயணிகள் கீழ் பெர்த்தில் அமரக்கூடிய வகையில் மிடில் பெர்த்தை மடக்கிவிட வேண்டும். அதேபோல, இரவு 10 மணிக்கு மேல் பயணிகள் தூங்கிய பிறகு யாரும் தொந்தரவு செய்யக் கூடாது. டிக்கெட் பரிசோதகர் கூட டிக்கெட் பரிசோதனைக்காக அந்த நேரத்தில் தொந்தரவு செய்ய முடியாது. ஆனால், இரவு 10 மணிக்கு மேல் பயணத்தைத் தொடங்கும் பயணிகளுக்கு இந்த விதி பொருந்தாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

newstm.in
 

Tags:    

Similar News