திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றி..!
திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை வெற்றி..!
வேலூர் மாநகராட்சி 37 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மூன்றாம் பாலினத்தவர் பெறும் முதல் வெற்றி இதுவாகும்.
வேலூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளுக்கு கடந்த 19-ம் தேதி நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், கடந்த 2002-ம் ஆண்டு முதல் திமுக உறுப்பினராக இருந்து வரும் திருநங்கை கங்கா நாயக், இத்தேர்தலில் திமுக சார்பில் 37-வது வார்டில் போட்டியிட்டார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் திருநங்கை கங்கா நாயக் 2131 வாக்குகள் பெற்று 15 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற அவருக்கு சக திருநங்கைகள் வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்தனர்.