அதிமுக சார்பில் போட்டியிடும் திருநங்கை!!

அதிமுக சார்பில் போட்டியிடும் திருநங்கை!!

Update: 2022-02-02 07:47 GMT

அதிமுக சார்பில் சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலத்தில் திருநங்கை ஜெயதேவி போட்டிருக்கிறார்.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் முதலில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 9 மாவட்டங்களுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது

இந்நிலையில் இம்மாதம் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ஆம் தேதி எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில், சட்டமன்ற தேர்தலின்போது ஏற்படுத்தப்பட்ட திமுக கூட்டணி தொடர்கிறது. எதிர்த்தரப்பில் அதிமுக, பாஜக கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

இந்நிலையில் அதிமுகவில் தென்சென்னை வடக்கு மாவட்ட மகளிர் அணி துணை செயலாளராக இருக்கும் திருநங்கை தேவிக்கு அதிமுக சார்பில் - சென்னை தேனாம்பேட்டை மண்டலம்., வார்டு எண் 112ல் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக தான் தேர்தலில் போட்டியிடுவதால் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்தல் களத்தில் சந்திக்க இருப்பதாக ஜெயதேவி தெரிவித்தார்.

அதிமுகவில் ஜெயலலிதா காலத்திலிருந்து அடிப்படை உறுப்பினராக இருக்கும் ஜெயதேவிக்கு இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

newstm.in

Similar News