திருவிழாவுக்கு பேருந்து கூரையின் மீது பயணம்.. 3 பேர் பலியான சோகம் !!
திருவிழாவுக்கு பேருந்து கூரையின் மீது பயணம்.. 3 பேர் பலியான சோகம் !!
கோவில் திருவிழாவுக்கு செல்ல பேருந்து கூரையின் மீது பயணம் செய்த 3 பேர் மின்சாரம் தாக்கி பலியாகி உள்ளனர்.
ராஜஸ்தானில் பிரசித்தி பெற்றற திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக மாநிலம் முழுவதும் இருந்து அங்கு மக்கள் திரண்டனர். இதற்காக பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பேருந்து நிரம்பியதால் சிலர் பேருந்தின் மேற்கூரை மீது ஏறி அமர்ந்து கொண்டனர்.
நிரம்பி வழிந்த பயணிகளுடன் பேருந்து புறப்பட்டு சென்றுக்கொண்டிருந்தப்போது, திடீரென நடந்த சம்பவம் அனைவரையும் தூக்கிவாரிபோட்டுவிட்டது. அதாவது ஜெய்சல்மர் நகரில் உள்ள போல்ஜி என்ற இடத்தில் பேருந்து சென்றபோது மேற்கூரையில் இருந்தவர்கள் மீது மின்சாரம் கம்பி உரசியுள்ளது. இதில் கூரையின் மீது பயணம் செய்தவர்களில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் நான்கு பேர் முதலுதவிக்கு பிறகு அதில் இருந்து மீண்டதாகவும், ஒருவர் ஜோத்பூருக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். அங்கு மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in