ஜெயலலிதா சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை

ஜெயலலிதா சிலைக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை

Update: 2022-02-05 08:15 GMT

அதிமுக ஆட்சியில் செய்யப்பட்டது போன்றே திமுக ஆட்சியிலும் ஒவ்வொரு ஆண்டும் ஜெயலலிதா சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படும் மற்றும் உயர்கல்வித்துறையில் இருந்த பொறுப்பை செய்தி மக்கள் தொடர்பு துறைக்கு மாற்றி, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஜெ ஜெயலலிதா அமைந்துள்ளது. இந்த நிலையில், சிலை பராமரிக்கும் நிர்வாகப் பொறுப்பு உயர்கல்வி துறையிலிருந்து மாற்றப்பட்டு இயக்குநர் செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் ஆண்டு தோறும் மற்ற தலைவர்களின் சிலைகளுக்கு அவர்களின் பிறந்த தினத்தன்று மாலை அணிவித்து அரசின் சார்பில் மரியாதை செய்யப்படுவதை போன்று ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களின் சிலைக்கும் மேற்கொள்ளப்படும், என அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை உயர்கல்வி மன்ற வளாகத்தில் அமைந்துள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையை பராமரிக்கும் நிர்வாகப் பொறுப்பை உயர்கல்வி துறையிலிருந்து செய்தி மக்கள் தொடர்புத்துறைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

newstm.in

Similar News