பெட்ரோல் போட 5 நாட்கள் காத்திருந்த லாரி ஓட்டுநர் மரணம்!!
பெட்ரோல் போட 5 நாட்கள் காத்திருந்த லாரி ஓட்டுநர் மரணம்!!
இலங்கையில் பெட்ரோல் போடுவதற்காக வரிசையில் 5 நாட்கள் காத்திருந்த லாரி ஓட்டுநர் மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. கடுமையான எரிபொருள் பற்றாக்குறையை சந்தித்து வரும் இலங்கைக்கு இந்தியா உள்ளிட்ட நாடுகள் பெட்ரோல், டீசல் அனுப்பி வருகின்றன.
ஆனாலும் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் இலங்கை தவித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் மற்றும் கியாஸ் நிரப்பும் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நாள் கணக்கில் காத்திருக்கும் நிலை உருவாகி உள்ளது.
இதுபோன்ற சூழலில், இலங்கையின் மேற்கு மாகாணத்தில் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் 5 நாட்களாக வரிசையில் காத்திருந்த லாரி ஓட்டுனர் (63) உயிரிழந்தார். அங்குருவடோடா பகுதியில் தனது வாகனத்தில் வரிசையில் காத்திருந்த அவர், உயிரிழந்து உள்ளார்.
இதனால் மொத்த பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்து உள்ளது. அவர்கள் அனைவரும் 43 முதல் 84 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களில் பலருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்து உள்ளனர்.
newstm.in