உண்மை சம்பவம்.. சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித்?

உண்மை சம்பவம்.. சுதா கொங்கரா இயக்கத்தில் அஜித்?

Update: 2022-04-24 07:54 GMT

கேஜிஎஃப் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்துள்ள இயக்குநர் சுதா கொங்கராவின் அடுத்தப் படத்தில் நடிகர் அஜித் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

நடிகர் அஜித்-க்கு சமீபத்திய படங்கள் வெற்றிபெற்று வசூலை குவித்தாலும் பெரியளவில் வெற்றியடையவில்லை. எதிர்மறையான விமர்சனங்களும் அதிகம் இருந்தது. தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது படத்தில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். இந்த நிலையில், தமிழகத்தில் பிரபலமான பெண் இயக்குநரின் அடுத்த படத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களுக்கு குஷியை ஏற்படுத்தியுள்ளது.

'இறுதிச் சுற்று' படத்தின் மூலம் பிரபலமடைந்தவர் இயக்குநர் சுதா கொங்கரா. சூர்யா நடிப்பில் அவர் இயக்கிய 'சூரரைப்போற்று' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது ‘சூரரைப் போற்று’ திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் பணியில் சுதா கொங்கரா ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் மீண்டும் ஓர் உண்மைச் சம்பவத்தை தழுவி புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை 'கேஜிஎஃப்' 'சலார்' படங்களை தயாரிக்கும் 'ஹோம்பலே பிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், சில உண்மைக் கதைகள் சரியான தருணத்தில் சொல்லப்பட வேண்டியவை. எங்களின் அடுத்தப் படத்தை சுதா கொங்கரா இயக்குகிறார் என்பதை அறிவிப்பதில் பெருமைக் கொள்கிறோம். எங்களது எல்லா படங்களைப் போன்று இந்தப் படத்தின் கதையும் இந்திய அளவில் ஈர்க்கும் என்று உறுதியாக நம்புகிறோம், எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கதையில் தான் தற்போது அஜித் நடிக்கவிருப்பதாக புதிய தகவல்கள் கிளம்பியுள்ளன. ஏற்கனவே அஜித் - சுதா இணையவிருப்பதாக அண்மைக்காலமாக செய்திகள் வந்ததன் தொடர்ச்சியாக இப்போதும் அது வட்டமடித்து வருகின்றன. ஆனால் சூரரைப் போற்று இந்தி ரீமேக். அதனை தொடர்ந்து வெப் சீரிஸ், காதல் கதை ஒன்று என ஷெடியூல் வைத்துள்ளார் இயக்குநர் சுதா. அதன் பிறகே இப்படத்தின் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

newstm.in

Tags:    

Similar News