நாய் குரைத்ததால் இரு குடும்பம் மோதல்.. தாய், இரு மகன்களுக்கு அரிவாள் வெட்டு !!
நாய் குரைத்ததால் இரு குடும்பம் மோதல்.. தாய், இரு மகன்களுக்கு அரிவாள் வெட்டு !!
நாய் குரைத்ததற்காக தாய், இரண்டு மகன்களை ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை அன்னை இந்திரா நகர் பகுதியில் ராஜலட்சுமி (43) என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன்கள் திவாகர் (22), ரித்தீஷ் (18) ஆகியோர் வீட்டில் நாய் ஒன்றை வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அதே பகுதியை சேர்ந்த தனசேகர் (31), ராஜலட்சுமி வீட்டின் வழியே சென்றுள்ளார். அப்போது, அவர்கள் வீட்டில் வளர்த்த நாய் குரைத்து கொண்டே இருந்துள்ளது. இதனால் தனசேகர் ஆத்திரம் அடைந்துள்ளார்.
இதுதொடர்பாக, ராஜலட்சுமி மற்றும் தனசேகர் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தனசேகர் மறைத்து வைத்திருந்த கத்தியால், ராஜலட்சுமி மற்றும் அவரது 2 மகன்களை சரமாரியாக வெட்டியுள்ளார். மேலும் அவர் அங்கிருந்து தப்பியோடினார்.
பின்னர் வெட்டுகாயம் அடைந்த ராஜலட்சுமி மற்றும் அவரது இரண்டு மகன்களையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், புதுவண்ணாரப் பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
newstm.in