பெண் குளிப்பதை வீடியோ எடுத்து அதுக்கு மிரட்டல்.. பெண் உள்பட இருவர் கைது !!

பெண் குளிப்பதை வீடியோ எடுத்து அதுக்கு மிரட்டல்.. பெண் உள்பட இருவர் கைது !!

Update: 2022-04-18 17:17 GMT

பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய பெண் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.   

பெரம்பலூர் அருகே கீழக்கணவாய் கிராமத்தை சேர்ந்த பொறியியல் பட்டதாரியான செல்வம்(33), அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் வேலைகள் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் அதே ஊரைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவர், அவரது வீட்டில் குளித்துக் கொண்டிருந்த போது செல்போன் மூலமாக வீடியோ எடுத்துள்ளார். இதற்கு செல்வத்துக்கு அவரது உறவினரான அதே ஊரைச்சேர்ந்த மலர்க்கொடி(45) என்பவர் உதவியுள்ளார்.

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த இருவரும், அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்து விடுவேன் என மிரட்டி, பாதிக்கப்பட்ட பெண்ணின் 10 ஆம் வகுப்பு படிக்கும் மகளை தனது ஆசைக்கு இணங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் செய்வதறியாது தவித்த பெண், இது குறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் குற்றத்தை உறுதி செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து  செல்வத்தையும், அவருக்கு உதவியாக இருந்த மலர்க்கொடியையும் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் எப்போது குளிக்க செல்கிறார், எங்கு நின்று செல்போனில் அதனை வீடியோவாக பதிவு செய்யலாம் என்பது குறித்து தகவல்களை மலர்க்கொடி செல்வத்துக்கு கூறியுள்ளது விசாரணையில் தெரியவந்தது. 

இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவர் மீதும்  இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, திருச்சி சிறையில் அடைத்தனர். பெண் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

 

Similar News