பெரும் அதிர்ச்சி.. போக்குவரத்தை சீர் செய்த இரு போலீசார் விபத்தில் பலி !!
பெரும் அதிர்ச்சி.. போக்குவரத்தை சீர் செய்த இரு போலீசார் விபத்தில் பலி !!
ராசிபுரம் அருகே சாலை விபத்தில் 2 காவலர்கள் பலியான சோகம் நடந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஏ.கே.சமுத்திரம் தனியார் கல்லூரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியும், காரும் மோதி கொண்டு விபத்து நேரிட்டது.
இந்த விபத்தை அடுத்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த டூரிஸ்ட் வேன் மோதியதில் புதுசத்திரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரசேகர், இராசிபுரம் காவல் நிலைய தலைமை காவலர் தேவராஜன் ஆகிய 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Newstm.in