எல்லையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை!!

எல்லையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொலை!!

Update: 2022-06-07 07:47 GMT

ஜம்மு காஷ்மீர் குப்வாரா பகுதியில் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகள் இடையே நடைபெற்ற சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் கொல்லப்பட்டனர்.

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ராணுவத்துடன் இணைந்து காஷ்மீர் போலீசாரும் அப்பகுதியில் அதிகாலை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

குப்வாரா மாவட்டம் சக்ரதாஷ் கண்டி என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

அதில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதி துபைல் உட்பட தடை செய்யப்பட்ட லஷ்கர்--தொய்பா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதி ஒருவன் என மொத்தம் இருவர் கொல்லப்பட்டனர்.

இன்னும் பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in


 

Similar News