விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!
விவசாய கிணற்றில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ள காவனூர் கிராமத்தில் உள்ள முனுசாமி என்பவருக்குச் சொந்தமான விவசாய கிணறு உள்ளது. இதன் அருகே இரு இளைஞர்களின் உடைமைகள் இருப்பதாக அரக்கோணம் நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் அரக்கோணம் தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்து இரண்டு இளைஞர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சென்னை மாதவரத்தைச் சேர்ந்த ரோஷன் (28) மற்றும் சென்னை பெரம்பூரை சேர்ந்த யுவராஜ் (38) என்பதும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அரக்கோணம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.