எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா!! உடனே ஸ்ட்ராபெர்ரி பழங்களை தூக்கி எறியுங்கள்..!!
எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா!! உடனே ஸ்ட்ராபெர்ரி பழங்களை தூக்கி எறியுங்கள்..!!;
கடந்த சில நாட்களாக அமெரிக்கா மற்றும் கனடாவில் ஹெபாடிடிஸ் நோயால் 17 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஹெபடைடிஸ் என்பது ஒரு வைரஸ் ஆகும். இந்த வைரஸில் ஐந்து முதன்மை வகைகள் உள்ளன. அவை ஏ, பி, சி, டி மற்றும் ஈ ஆகும். மேலும் இந்த நோய்கள் பல்வேறு வழிகளில் பரவுகிறது. ஹெபடைடிஸ் ஏ மற்றும் ஈ பெரும்பாலும் அசுத்தமான உணவு மற்றும் நீரால் பரவுகின்றன. சோர்வு, குமட்டல், வாந்தி, வயிற்று வலி மற்றும் மஞ்சள் காமாலை ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
இந்த நோய் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து நடந்த விசாரணையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அனைவரும் குறிப்பிட்ட 2 நிறுவனங்களின் ‘ஆர்கானிக்’ ஸ்ட்ராபெர்ரி பழத்தை சாப்பிட்டு உள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்த அடுத்தகட்ட ஆய்வில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் மற்றும் கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தீவிரமாக இறங்கி உள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீங்கள் எப்போது உங்கள் ஸ்ட்ராபெர்ரி பழத்தை வாங்கியுள்ளீர்கள், அல்லது அவற்றை உறைய வைப்பதற்கு முன்பு எங்கிருந்து வாங்கினீர்கள் என்று உங்களுக்குத் தெரியாவிட்டால், அந்த ஸ்ட்ராபெர்ரி பழங்களை தூக்கி எறிய வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளது.