உக்ரைன்: 18- 60 வயதுடைய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை !
உக்ரைன்: 18- 60 வயதுடைய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை !
உக்ரைனில் இருந்து 18 முதல் 60 வயதுடைய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து அந்நாட்டு அதிபர் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி உத்தரவிட்டுள்ளார்.
ரஷியா- உக்ரைன் இடையே கடந்த மாதங்களாக போா் பதற்றம் நிலவி வந்தது. உக்ரைன் எல்லையில் சுமாா் 1.50 லட்சம் ராணுவ வீரா்களை ரஷியா குவித்ததால் எந்த நேரமும் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என்ற சூழல் காணப்பட்டது.
இந்த நிலையில், கிழக்கு உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளா்ச்சியாளா்களின் கட்டுப்பாட்டில் உள்ள டொனட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் ஆகிய பிராந்தியங்களை தனி நாடுகளாக அங்கீகாரம் அளிக்கும் உத்தரவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் கையொப்பமிட்டாா். மேலும், அந்த பிராந்தியங்களில் ‘அமைதி காக்கும்’ பணியில் ஈடுபடுவதற்காக படைகளை அனுப்புவதாகத் தெரிவித்தது.
இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) காலை தொலைக்காட்சியில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் உரையாற்றியபோது உக்ரைன் மீது தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளதாக அறிவித்தாா். இதையடுத்து ரஷிய படைகள் உக்ரைன் சுற்றி வளைத்து எல்லை ராணுவ நிலைகள் மீதும் ரஷிய படையினர் ஏவுகணை மற்றும் ராக்கெட் குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இத்தாக்குதலில் ராணுவ வீரர்கள் உள்பட 137 பேர் முதல் நாளில் உயிரிழந்தனர்.
ரஷிய படைகளின் தாக்குதல் அச்சத்தால் கீவ் நகரைவிட்டு அவசரமாக வெளியேற ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் முயன்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், உக்ரைன் நாட்டில் இருந்து 18 முதல் 60 வயதுடைய ஆண்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
18 முதல் 60 வயதுடைய ஆண்கள் நாட்டுக்காக ரஷ்யாவை எதிர்த்து சண்டையிடவும் அறிவுறுத்தியுள்ளது. கீவ் நகரை நோக்கி ரஷி படைகள் முன்னேறி வரும் நிலையில், கீவ் நகரில் உள்ள மக்களுக்கு பத்தாயிரம் தானியங்கி துப்பாக்கிகள் வினியோகிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in