மே 9-க்குள் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா திட்டம்- காரணத்தை கூறும் உக்ரைன் !
மே 9-க்குள் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா திட்டம்- காரணத்தை கூறும் உக்ரைன் !
உக்ரைனில் ரஷ்ய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் ஒரு மாதத்தையும் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியுள்ளது. எனினும் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட முக்கிய இடங்களை கைப்பற்ற ரஷ்யா கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு உக்ரைன் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
தொடர் தாக்குதலால் உக்ரைன் உருக்குலைந்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளனர். இதனிடையே, இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த நிலையில் மே 9ஆம் தேதிக்குள் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யா விரும்புவதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் ஆயுதப் படைகளின் உளவுத்துறை தரப்பில் கூறியிருப்பதாவது, மே 9 ஆம் தேதி ரஷ்யா, ஜெர்மனியை போரில் வென்ற நாளாக கொண்டாடப்படுகிறது. அதனால் மே 9 ஆம் தேதிக்குள் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று ரஷ்யா தங்கள் நாட்டு ராணுவத்திடம் தெரிவித்துள்ளது, என கூறப்பட்டுள்ளது.
newstm.in