உக்கிரமான போரின் நடுவே ரஷ்யாவின் பீரங்கியை திருடிச்செல்லும் உக்ரைன் விவசாயி..!

உக்கிரமான போரின் நடுவே ரஷ்யாவின் பீரங்கியை திருடிச்செல்லும் உக்ரைன் விவசாயி..!

Update: 2022-03-02 12:10 GMT

கடந்த 24-ம் தேதி, உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர்.

அந்நாட்டின் விமான நிலையம், துறைமுகங்கள், ராணுவ நிலைகள் ஆகியவற்றை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டன. இதில் 80-க்கும் மேற்பட்ட ராணுவ தளவாட கட்டமைப்புகள் அழிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்தது.

அதன்பின் முக்கிய நகரங்களுக்குள் ரஷிய படைகள் நுழைந்தன. குறிப்பாக தலைநகர் கிவ்வை கைப்பற்ற ரஷிய படை கடும் தாக்குதலை நடத்தி வருகிறது.

அதே போல் மற்ற முக்கிய நகரங்களுக்குள்ளும் ரஷிய வீரர்கள் நுழைந்து தாக்குதலை கடுமையாக்கி வருகின்றனர். அவர்களுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்களும் கடுமையாக போரிட்டு வருகின்றனர். இன்று, 7வது நாளாக உக்ரைன் மீது ரஷ்யா ஆக்ரோஷ தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், ரஷ்யாவின் பீரங்கியை உக்ரைன் விவசாயி ஒருவர் தனது டிராக்டரில் இணைத்து திருடிச்செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.

தேதி குறிப்பிடப்படாத அந்த வீடியோவில், ரஷ்யாவின் எம்டிஎல்வி எனப்படும் பீரங்கியை தனது டிராக்டருடன் இணைத்து திருடிச்செல்கிறார்.

https://twitter.com/JohnnyMercerUK/status/1498027274683174913?ref_src=twsrc^tfw|twcamp^tweetembed|twterm^1498027274683174913|twgr^|twcon^s1_&ref_url=https://www.dailythanthi.com/News/World/2022/03/02103556/Netizens-cheer-as-video-of-Ukrainian-farmer-stealing.vpf

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது. இங்கிலாந்து எம்பி ஜானி மெர்சர் உட்பட, “நிபுணர் இல்லை, ஆனால் படையெடுப்பு சிறப்பாக நடப்பதாகத் தெரியவில்லை. உக்ரேனிய டிராக்டர் இன்று ரஷ்ய டாங்கியை  திருடுகிறது” எனக் கூறியுள்ளார்.

இந்த வீடியோவை, இதுவரை 46 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து ரசித்துள்ளனர். மேலும், இந்த வீடியோவை ஆஸ்திரியாவுக்கான உக்ரைன் தூதர் அலெக்சாண்டர் ஷெர்பாவும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

Similar News