உலகில் கண்டறியப்படாத கொரோனா – இஸ்ரேல் பகீர்!!
உலகில் கண்டறியப்படாத கொரோனா – இஸ்ரேல் பகீர்!!
உலகில் வேறெங்கும் கண்டறியப்படாத கொரோனா தொற்று தங்கள் நாட்டில் பாதித்துள்ளதாக இஸ்ரேல் அரசு கூறியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், 2 மாதங்களுக்குள் உலகில் 120க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியது. அது டெல்டா வைரஸைவிட வேகமாக பரவி அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் டெல்டா அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இந்நிலையில் இஸ்ரேலில் ஒமைக்ரான் திரிபின் பிஏ1 மற்றும் பிஏ2 ஆகிய இரு திரிபுகள் ஒன்றிணைந்து புதிய வைரஸாக உருமாறியுள்ளாதாகவும், இஸ்ரேல் நாட்டில் விமான நிலையத்தில் இருவருக்கு இந்த பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இன்ஃப்ளூயன்ஸா வைரஸும், கொரோனா வைரஸும் சேர்ந்து ஒருங்கிணைந்து ஃப்ளோரோனா வைரஸ் என உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. உலக நாடுகள் டெல்டா, ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராக போராடி வரும் நிலையில் ஃப்ளோரோனோ வைரஸ் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கொரோனா மாறுபாடு வைரஸ் இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் இதுகுறித்து தேவையில்லாமல் கவலைப்படதேவைஇல்லை என்று அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளனர். இஸ்ரேல் விமான நிலையத்திற்கு வந்த இரண்டு பயணிகளிடம் புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இந்த மாறுபாடு இன்னும் உலகம் முழுவதும் அறியப்படவில்லை என்றும் இஸ்ரேல் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒருங்கிணைந்த மாறுபாட்டின் காரணமாக இருவர், காய்ச்சல், தலைவலி மற்றும் தசைநார் சிதைவு போன்ற லேசான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
newstm.in