3,552 பணியிடங்களுக்கான சீருடை பணியாளர் தேர்வு.. இன்று வெளியாகிறது அறிவிப்பு..!

3,552 பணியிடங்களுக்கான சீருடை பணியாளர் தேர்வு.. இன்று வெளியாகிறது அறிவிப்பு..!

Update: 2022-06-30 04:55 GMT

தமிழக காவல்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலைக் காவலர், சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய 3,552 பணியிடங்களுக்கான நேரடித் தேர்வுக்கான அறிவிப்பை சீருடை பணியாளர் தேர்வு வாரியம் இன்று  (30-ம் தேதி) வெளியிடுகிறது.

விண்ணப்பதாரர்கள் www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஜூலை 7-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், தேவையான உடல் தகுதியும் வேண்டும். எனவே, நல்ல உடல் தகுதியுடன், 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று, காவலராக விருப்பமுள்ளவர்கள் இந்தத் தேர்வுக்கு தயாராகிக் கொள்ளுங்கள்.

Similar News