பல்கலை. வேந்தராகிறார் முதல்வர்.. விரைவில் மசோதா நிறைவேற்றம்..!
பல்கலை. வேந்தராகிறார் முதல்வர்.. விரைவில் மசோதா நிறைவேற்றம்..!
மேற்கு வங்க பல்கலைக்கழகங்களுக்கு, முதல்வர் மம்தா பானர்ஜியை வேந்தராக ஆக்க முடிவு செய்து மேற்கு வங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
மேற்கு வங்கத்தில், பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர் ஜெகதீப் தங்கார் பதவி வகித்து வருகிறார். இந்த பதவியை அவரிடம் இருந்து முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மாற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான தீர்மானத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, முதல்வர் மம்தா பானர்ஜியை பல்கலைக் கழகங்களின் வேந்தர் ஆக்க வகை செய்யும் சட்ட மசோதா உருவாக்கப்பட்டு, விரைவில் சட்டசபையில் நிறைவேற்றப்பட உள்ளது.