திருமணமாகாத ஏக்கம்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு !!

திருமணமாகாத ஏக்கம்.. இளைஞர் எடுத்த விபரீத முடிவு !!

Update: 2022-06-25 20:19 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளம் என்றால் இப்போது தமிழகத்தில் அனைவருக்கும் தெரியும். ஏனெனில் அங்கு வியாபாரிகளான தந்தை, மகனை போலீசார் அடித்துக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய போலீசார் தற்போது சிறையில் உள்ளனர். இந்த நிலையில் தற்போது சாத்தான்குளத்தில் நடந்துள்ள மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தான்குளம் அருகேயுள்ள புளியங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சக்திவேல். இவருக்கு 5 மகன்கள் உள்ள நிலையில், இவர்களில் 4 பேருக்கு திருமணமானது. மற்றொரு மகனான சிவகுமார் (29) வீட்டில் இருந்துள்ளார்.

தற்போது திருமண வயது வந்துவிட்டதால் சிவகுமாருக்கு அவரது பெற்றோர் வரன் பார்த்து வந்தனர். ஆனால், அவருக்கு சற்று மனவளர்ச்சி குறைபாடு உண்டு என கூறப்படுவதால், அதன்காரணமாக திருமண வரன் அமையவில்லை என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

திருமணத்துக்கு பெண் கிடைக்காததால் விரக்தியடைந்த சிவகுமார், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து கதறிஅழுதனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டனர். இதுகுறித்து அவரது சகோதரர் தாமோதரன், அளித்த புகாரில் சாத்தான்குளம் போலீசில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


newstm.in

Similar News