வாகன ஓட்டிகள் சரியான முறையில் ஹெல்மெட் அணியவில்லை என்றாலும், ஹெல்மெட் அணிவதற்கான விதிகளை மீறினாலும் அபராதம் விதிக்க அரசு முடிவெடுத்துள்ளது. அதன்படி மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதன்படி,

  • நீங்கள் ஹெல்மெட் அணிந்திருந்தாலும், மோட்டார் சைக்கிள் அல்லது ஸ்கூட்டரை ஓட்டும் போது ஹெல்மெட்டின் ஸ்ட்ரைப் அவிழ்க்கப்பட்டிருந்தால், ரூ. 1,000 அபராதம் செலுத்த வேண்டும்.
  • உங்கள் ஹெல்மெட்டுக்கு BSI (Bureau of Indian Standards) சான்றிதழ் இல்லை என்றால், உங்களிடம் ரூ. 1,000 அபராதம் விதிக்கப்படலாம்.
  • சிவப்பு சிக்னலை மீறி வாகனம் ஓட்டுவது போன்ற பிற போக்குவரத்து விதிகளை மீறினால், ஹெல்மெட் அணிந்திருந்தாலும் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும்.
  • வாகனத்தில் அதிக பாரம் ஏற்றினால், ரூ. 20,000 அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.

இதன் மூலம், இரு சக்கர வாகனங்கள் சம்பந்தப்பட்ட ஆபத்தான காயங்களை குறைக்க இது உதவியாக இருக்கும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.