உஷார்! இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா!!
உஷார்! இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,506 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 11,793-ஐ விட அதிகம் என்பதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,34,33,345 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 11,574 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,28,08,666 ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 99,602 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 30 பேர் உயிரிழந்தனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5,25,77 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 197,46,57,138 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளது.
newstm.in