உஷார்! வேகமாக பரவும் குரங்கு அம்மை… அமெரிக்கா, ஐரோப்பாவில் பாதிப்பு!!
உஷார்! வேகமாக பரவும் குரங்கு அம்மை… அமெரிக்கா, ஐரோப்பாவில் பாதிப்பு!!
கொரோனா பரவலுக்கு பிறகு உலகில் எந்த நோய் பரவினாலும், உஷாராக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் 2019 இறுதியில் சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா உலகையே ஆட்டுவிக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
பிரிட்டனில் நோய் பரவத் தொடங்கிய குரங்கு அம்மை நோய் தற்போது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளையும் எட்டியுள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டில் முதன்முதலாக மசாசூசெட்ஸ் நகரில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் அண்மையில் கனடாவுக்குச் சென்று வந்தார் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நோயாளியுடன் தொடர்பில் இருந்தவர்களை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
மேலும், ஐரோப்பிய நாடுகளான போர்ச்சுகலில் ஐந்து பேரும், பிரிட்டனில் இரண்டு பேரும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஸ்பெயினின் மத்திய மாட்ரிட் பிராந்தியத்தில் பலருக்கும் இந்த பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. தடுப்பூசியின் காரணமாக 1980 ஆம் ஆண்டு உலகளவில் பெரியம்மை அழிக்கப்பட்டாலும், குரங்கு அம்மை பாதிப்பு இன்னும் மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளில் பரவலாக உள்ளது.