உஷார்! தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை!!
உஷார்! தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து பாலியல் தொல்லை!!
வீட்டில் தனியாக இருக்கும் பெண்களிடம் குறிவைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை கொடுங்கையூரில் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மர்ம நபர் அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
அந்தப் பெண் கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வருந்தால் அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மாதவரம் பால்பண்ணை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்த நபர் கொடுங்கையூர் பகுதியில் அரிசி மண்டி நடத்தி வரும் ரமேஷ் (26) என்பது தெரியவந்தது.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அந்த நபரை பிடித்து விசாரித்தபோது ஏற்கனவே அவர் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக அங்கிருந்து தலைமறைவான நபர் கோவையில் சில காலம் தங்யிருந்தார்.
பின்னர் சென்னை வந்து கொடுங்கையூர், மற்றும் மாதவரத்தில் அரிசி மண்டி வருவதும் தெரியவந்தது. இதே போன்று பல பெண்களிடம் அந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து விசாரணைக்கு பின்னர் காவல்துறையினர் அரிசி மண்டி உரிமையாளர் ரமேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
newstm.in