போலியான ரேஷன் அட்டை வைத்திருந்த மாநிலங்களில் பட்டியலில் உத்திரபிரதேசம் முதலிடம்!! அப்போ தமிழ்நாடு..?
போலியான ரேஷன் அட்டை வைத்திருந்த மாநிலங்களில் பட்டியலில் உத்திரபிரதேசம் முதலிடம்!! அப்போ தமிழ்நாடு..?
ஒன்றிய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 1-ம் தேதி மக்களவையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், ஒரு நபர் வெவ்வேறு இடங்களில் ரேஷன் அட்டை வைத்திருப்பதை ஒன்றிய அரசு கண்டறிந்துள்ளதா என்று உறுப்பினர் ஒருவர் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஒன்றிய நுகர்வோர்த்துறை இணை அமைச்சர் அஷ்வினி குமார், 2014 முதல் 2021 வரை தகுதியற்ற 4 கோடியே 28 லட்சம் ரேஷன் அட்டை கணக்குகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 1.70 கோடியும், தமிழ்நாட்டை பொறுத்தவரை 3.4 லட்சம் ரேஷன் அட்டைகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.