மாதந்தோறும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்..!!
மாதந்தோறும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம்..!!
தமிழக மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், 'தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முதல் தவணையை 93.55 சதவீதம் பேரும், 2-ம் தவணையை 81.85 சதவீதம் பேரும் செலுத்தி உள்ளனர். 2 கோடி பேர் தடுப்பூசியை செலுத்தி கொள்ளாமல் இருக்கிறார்கள்.
எனவே தடுக்கி விழுகிற இடமெல்லாம் தடுப்பூசி முகாம் என்கிற வகையில் ஜூன் 12-ந்தேதி ஒரு லட்சம் இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதுபோன்று மாதந்தோறும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.