12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி.. பிரதமர் மோடி வாழ்த்து..!

12 முதல் 14 வயது வரையிலான சிறார்களுக்கு தடுப்பூசி.. பிரதமர் மோடி வாழ்த்து..!

Update: 2022-03-16 12:58 GMT

இந்தியாவில், 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கு தேசிய தடுப்பூசி தினமான இன்று (16-ம் தேதி) முதல் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று, 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி உள்ளது.

மேலும், 60 வயதான அனைவருக்கும் முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் தடுப்பூசி டோஸ்களும் இன்று முதல் செலுத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில், 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமியருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது குடிமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான இந்தியாவின் முயற்சிகளில் இன்று முக்கியமான நாள். இப்போது முதல், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட சிறார்கள் தடுப்பூசிகளுக்கு தகுதியுடையவர்கள்.

மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முன்னெச்சரிக்கை டோஸ்களுக்கு தகுதியுடையவர்கள். இந்த வயதினரை தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

தடுப்பூசி திட்டத்தின் கீழ், பல நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பினோம். இந்தியாவின் தடுப்பூசி முயற்சிகள் கொரோனாவுக்கு எதிரான உலகளாவிய போராட்டத்தை வலுப்படுத்தியதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்று, இந்தியாவில் பல ‘மேட் இன் இந்தியா’ தடுப்பூசிகள் உள்ளன. உரிய மதிப்பீட்டிற்கு பிறகு மற்ற தடுப்பூசிகளுக்கும் அனுமதி வழங்க உள்ளோம். இந்த கொடிய தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு நாம் சிறந்த நிலையில் இருக்கிறோம்.

அதே நேரத்தில், கொரோனா தொடர்பான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து பின்பற்ற வேண்டும்” என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

Similar News