சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!!

சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடக்கம்!!

Update: 2022-04-28 08:29 GMT

6 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்குகிறது.

இந்தியாவில் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல், தற்போது மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் தொற்று தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது மாநிலங்களில் தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார்.

அப்போது பேசிய பிரதமர், சிறுவர்களுக்கு விரைவாக தடுப்பூசி செலுத்த வேண்டும் என்றும், நாடு முழுவதும் 6 வயதில் இருந்து 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என்றும் அறிவித்தார்.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வழங்குகிறது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்து வருவதால் மீண்டும் தடுப்பூசி போடும் பணி துரிதப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Similar News