‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ஷூட்டிங் நிறுத்தம்.. ரெடின் கிங்ஸ்லி செயலால் வடிவேலு அதிருப்தி?

‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ ஷூட்டிங் நிறுத்தம்.. ரெடின் கிங்ஸ்லி செயலால் வடிவேலு அதிருப்தி?

Update: 2022-02-13 04:05 GMT

வடிவேலு மீதான பிரச்சினைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டதால், சுராஜ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமானார் வடிவேலு. லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைப்பாளராகப் பணிபுரியவுள்ளார்.

முதலில் இந்தப் படத்துக்கு 'நாய் சேகர்' எனத் தலைப்பு வைக்கப் படக்குழு முடிவு செய்தது. ஆனால், சதீஷ் நடித்துள்ள படத்துக்கு அந்தத் தலைப்பு வைக்கப்பட்டு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டதால், பின்னர் இந்தப் படத்துக்கு 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' என்று தலைப்பு வைத்தது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகர் வடிவேலுவின் கம்பேக் படமாக உருவாகிவருவதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இந்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன் நடிப்பதாக சொல்லப்படுகிறது. தவிர இவர்களுடன் சிவாங்கி, ரெடின் கிங்ஸ்லி, ஆனந்தராஜ், விக்னேஷ்காந்த், லொள்ளு சபா சேஷு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் வடிவேலுவிற்கும் மற்றொரு நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சென்னையில் நடந்த படப்பிடிப்பிற்கு நடிகர் கிங்ஸ்லி 2 மணி நேரம் தாமதாக வந்ததால் வடிவேலு 2 மணி நேரம் காத்திருந்ததாக கூறப்படுகிறது. மேலும் உரிய நேரத்தில் படப்பிடிப்பு தொடங்கப்படவில்லை. இதனால் கடுப்பான வடிவேலு அன்று ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு கிளம்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

படப்பிடிப்பிற்கு தான் நேரத்திற்கு வருவதை போலவே மற்ற கலைஞர்கள் உள்ளிட்டோரும் நேரம் தவறாமல் வர வேண்டும் என எதிர்ப்பார்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பவர் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Similar News