ஐகோர்ட் தீர்ப்புக்கு மதிப்பு.. ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்பறைக்கு சென்ற மாணவிகள்..!

ஐகோர்ட் தீர்ப்புக்கு மதிப்பு.. ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்பறைக்கு சென்ற மாணவிகள்..!

Update: 2022-03-23 12:40 GMT

கர்நாடக மாநிலத்தில் கடந்த மாதம் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து, பள்ளி மற்றும் கல்லூரிகளில் மத அடையாள ஆடைகளை அணியக்கூடாது என்று மாநில அரசு உத்தரவிட்டது.

இது தொடர்பாக கர்நாடக ஐகோர்ட் கடந்த சில தினங்களுக்கு முன்பு இறுதி தீர்ப்பு வழங்கியது. அதில், மாநில அரசின் உத்தரவு செல்லும் என்றும், மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்றும் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக பல்வேறு பகுதிகளில் மாணவிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல மாணவிகள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லாமல் புறக்கணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று, தட்சிண கன்னடா மாவட்டம் உப்பினங்கடி பகுதியில் உள்ள கல்லூரிக்கு முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர்.

அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய கல்லூரி முதல்வர், ஐகோர்ட் தீர்ப்பை சுட்டிக்காட்டி, ஹிஜாப்பை கழற்றிவிட்டு வகுப்பறைக்கு செல்லும்படி கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட மாணவிகள், தனி அறைக்கு சென்று ஹிஜாப்பை அகற்றிவிட்டு வகுப்பறைக்கு சென்றனர்.

Similar News