சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வண்டலூர் பூங்காவும் அதிரடி முடிவை எடுத்துள்ளது.
பூங்காவிற்குள் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது முழு தடை இல்லை. புதிய முயற்சியை பூங்கா நிர்வாகம் கையில் எடுத்துள்ளது.
வண்டலூர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் பயன்படுத்திய குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் வீசுவதை தடுக்கும் வகையில் ரூ.10 வைப்புத் தொகை செலுத்தும் புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பாட்டில்களில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு 10 ரூபாய் பெறப்படும். அங்குள்ள கடைகளில் 10 ரூபாய் கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கினாலும் அதில் ஸ்டிக்கர் ஒட்டி கூடுதலாக 10ரூபாய் முன்பணமாக பெற்றுக்கொள்ளப்படும்.
உள்ளே சுற்றிப்பார்த்துவிட்டு மீண்டும் வந்து ஸ்டிக்கர் ஒட்டிய பிளாஸ்டிக் பாட்டிலை ஒப்படைத்துவிட்டு பத்து ரூபாயை வாங்கிக்கொள்ள வேண்டும். இந்த நடைமுறைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
newstm.in