பயணிகளுக்கு சைவ உணவு.. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் நிபந்தனை..!

பயணிகளுக்கு சைவ உணவு.. தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் நிபந்தனை..!

Update: 2022-03-24 20:32 GMT

அரசு பேருந்துகள் பயணத்தின்போது நிறுத்தும் பயண வழி உணவகங்களில் சைவ உணவு மட்டுமே தயார் செய்ய வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, உரிமம் பெற்றுள்ள பயண வழி உணவகங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விதித்துள்ள நிபந்தனையில் கூறப்பட்டுள்ளதாவது; ‘உணவகத்தில் கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும். பயோ கழிவறை அமைக்கப்பட வேண்டும்.

உணவக வளாகத்தில் பயணிகள் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும். உணவகத்தில் விற்கப்படும் பொருட்களின் விலை எம்ஆர்பி-யை விட அதிகம் இல்லாமல் இருக்க வேண்டும்.

உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும். உணவகத்தில் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய  வேண்டும்’ என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

Similar News