வாகனங்களுக்கான காப்பீடு கட்டணம் ஏப்ரல் 1 முதல் உயர்வு!!
வாகனங்களுக்கான காப்பீடு கட்டணம் ஏப்ரல் 1 முதல் உயர்வு!!
வாகனங்களுக்கான மூன்றாம் நபர் மோட்டார் இன்சூரன்ஸ் பிரீமியம் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்த இருப்பது தெரியவந்துள்ளது.
இதற்கான முன்மொழிவை மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் செய்துள்ளது. இதனால் புதிய கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் தொகை உயர்வு நடவடிக்கை வரும் ஏப்ரல் 1ம் தேதி நடைமுறைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சாலை போக்குவரத்துத்துறை அமைச்சகம் முன்மொழிந்திருப்பதன்படி, 1000 சிசி திறன் கொண்ட தனி நபர் கார்களுக்கு ரூ. 2,094 மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியம் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, ரூ. 2,072 மட்டுமே இதற்கான கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.
இதேபோல் 1000 சிசி முதல் 1,500 சிசி வரையிலான திறன் கொண்ட கார்களுக்கு ரூ. 3,416 வரை பிரீமியம் தொகை உயர்த்தப்பட இருக்கின்றது. தற்போது ரூ. 3,221 மட்டுமே பிரீமியம் தொகையாக வசூலிக்கப்படுகின்றது.
1500 சிசி-க்கும் அதிகமான திறன் கொண்ட வாகனங்களுக்கு ரூ. 7,897 வரை பிரீமியம் உயர்த்தப்பட இருக்கின்றது. தற்போது 7,890 ரூபாய் இதற்கான பிரீமியம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
150 சிசி முதல் 350 சிசி வரையிலான இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 1,366 வரையிலும், 350 சிசி-க்கும் அதிகமான திறன் கொண்ட டூ-வீலர்களுக்கு ரூ. 2,804 வரையிலும் பிரீமியம் கட்டணம் உயர இருக்கின்றது. இந்த திடீர் பிரீமியம் உயர்வு அறிவிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
newstm.in