ராணுவ வீரர்களுக்கு வயாகரா, செயற்கை ஆணுறுப்புகள்.. பெரும் அதிர்ச்சியில் மக்கள் !!

ராணுவ வீரர்களுக்கு வயாகரா, செயற்கை ஆணுறுப்புகள்.. பெரும் அதிர்ச்சியில் மக்கள் !!

Update: 2022-04-14 15:49 GMT

கால்பந்து, போதை பொருள்களுக்கு பெயர்போன பிரேசிலில் அதிபர் ஜயார் பல்சொனாரோ தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்நாட்டு நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினரான எலியாஸ் வாஸ் என்பவர், தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், பிரேசில் ராணுவத்துக்கு எந்தெந்த விஷயங்களுக்காக செலவிடப்படுகிறது என அவர் கேள்வியெழுப்பி இருந்தார். 

இதற்காக கிடைக்கப்பெற்ற தகவல்கள் தான் தற்போது அந்நாட்டில் புயலை கிளப்பியுள்ளன. அதாவது, பிரேசில் ராணுவ வீரர்களுக்கு வயாகரா மாத்திரைகள் மற்றும் செயற்கை ஆணுறுப்புகளை வாங்குவதற்காக லட்சக்கணக்கில் பணத்தை அரசாங்கம் செலவிடுவதாக அந்த பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த எலியாஸ் வாஸ், இந்த விவகாரத்தை ஊடகங்கள் வயலாக நாட்டு மக்களுக்கு தெரிவித்தார். இதனால் தற்போது இந்த விஷயம் அங்கு பெரியளவில் வெடித்துள்ளது. பொதுமக்களுக்கு உயிர் காக்கும் மருந்துகளுக்கு கூட பிரேசிலில் தட்டுப்பாடு நிலவும் சூழலில், ராணுவ வீரர்களுக்கு லட்சக்கணக்கான பணத்தை செலவிட்டு வயாகராவும், செயற்கை ஆணுறுப்புகளும் வாங்குவது தேவைதானா? என எதிர்க்கட்சிகள் கேள்யெழுப்பி வருகின்றன. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டத்திலும் குதித்துள்ளன. மக்களும் இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவாக திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பிரேசில் ராணுவம் மறுப்பு தெரிவித்திருக்கிறது. இதுகுறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படும் ராணுவத்தினருக்கு சிகிச்சை அளிக்கவே வயாகரா மாத்திரைகள் வாங்கப்பட்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம், எனக் கூறப்பட்டுள்ளது. 

ஆனால், செயற்கை ஆணுறுப்புகள் வாங்கப்பட்டது தொடர்பாக ராணுவம் எந்தவித விளக்கமும் அளிக்காதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் அதிபருக்கு எதிராகவும் அவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.  

 

newstm.in

 


 

Similar News