கலைஞரின் சிலையை திறந்து வைத்தார் துணை குடியரசுத் தலைவர்!!

கலைஞரின் சிலையை திறந்து வைத்தார் துணை குடியரசுத் தலைவர்!!

Update: 2022-05-28 19:20 GMT

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின்  திருவுருவச் சிலையினை குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

தமிழக சட்டப்பேரவையில் ஏப்ரல் 26ம் தேதி 110 விதியின் கீழ் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி பிறந்த ஜூன் 3ம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும். மேலும் சென்னை ஓமந்தூரார் தோட்ட வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும்’ என்று அறிவித்தார்.

அதன்படி ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் சிலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ளது போன்றே இந்த சிலையும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

இதனை முதலமைச்சர் மு..ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள விழாவில் மாலை 5.30 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு அவர்கள் திறந்து வைத்தார்.

மேலும். ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் திறக்கப்பட்ட கலைஞரின் 16 அடி உயரமுள்ள வெண்கல சிலையின் கீழ் அமைந்துள்ள 14 அடி உயர பீடத்தில், கலைஞரின் 5 கட்டளைகள் பொறிக்கப்பட்டுள்ளன.

newstm.in

Similar News