வெற்றி கொண்டாட்டம்.. அறிவாலயத்துக்கு பணமாலையுடன் வந்த கவுன்சிலர் !!
வெற்றி கொண்டாட்டம்.. அறிவாலயத்துக்கு பணமாலையுடன் வந்த கவுன்சிலர் !!
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும் வெற்றியை குவித்துள்ளது திமுக. குறிப்பாக 21 மாநகராட்சியையும் கைப்பற்றி சாதித்துள்ளது. அதிமுகவின் கோட்டையென கருதப்பட்ட மேற்கு மண்டலத்திலும் முழு வெற்றியை திமுக பதிவு செய்துள்ளது. இதனால் திமுக தலைமையும் திமுக தொண்டர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
இதனையொட்டி, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள், தொண்டர்கள், அமைச்சர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அப்போது புத்தகங்கள், சால்வைகள், பூங்கொத்துகள் கொடுத்து அவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பணமாலை அணிவிக்க வந்த கவுன்சிலரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை 133ஆவது வார்டில் வெற்றி பெற்ற திமுக கவுன்சிலர் ஏழுமலை, முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதற்காக 20 ரூபாய் நோட்டுகள் தொடுக்கப்பட்ட 40,000 ரூபாய் மதிப்புள்ள பணமாலையுடன் சென்னை அறிவாலயத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றும் வைரலாகிறது.
newstm.in