காலணிய கவனிக்கல.. மன்னிச்சுக்கோங்க.. தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் சிவன் கடிதம்..!

காலணிய கவனிக்கல.. மன்னிச்சுக்கோங்க.. தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் சிவன் கடிதம்..!

Update: 2022-06-11 10:09 GMT

நடிகை நயன்தாராவும், அவருடைய கணவர் விக்னேஷ் சிவனும் நேற்று மதியம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து, திருப்பதியில் நடைபெற்ற கல்யாண உற்சவத்தில் இருவரும் கலந்து கொண்டனர்.

பின்னர் கோவிலுக்கு வெளியே ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால், அங்கிருந்து சென்ற இருவரும், சிறிது நேரத்தில் அதே பகுதிக்கு வந்து போட்டோ ஷூட் நடத்தினர். அப்போது இருவரும் காலணி அணிந்திருந்தனர்.

இதனால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில், தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

திருமலையில் போட்டோ ஷூட் செய்வதோ, நான்கு மாட வீதியில் காலணி அணிந்து நடமாடுவதோ கூடாது என்பது ஏற்கனவே விதிக்கப்பட்ட விதியாகும்.

இந்த நிலையில், திருப்பதியில் நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரி தேவஸ்தானத்திற்கு விக்னேஷ் சிவன் எழுதியுள்ள கடிதத்தில், “காலணியுடன் நாங்கள் நடமாடியதை கவனிக்க தவறிய செயலுக்கு மன்னிப்பு கோருகிறேன். போட்டோ ஷூட் எடுத்தபோது காலணி அணிந்திருந்ததை உணரவில்லை” என தெரிவித்துள்ளார்.

Similar News